மகளை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரம்... மதுவுக்கு அடிமையானதால் விபரீதம்!

 

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான கூலித் தொழிலாளி ஒருவர், தனது 17 வயது மகளை நண்பரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கங்காவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் பி.யூ. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கூலித் தொழிலாளியான அவரது தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றும், தினமும் குடித்துவிட்டு வந்து தாயாருடன் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, மது போதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி, சிறுமியை வலுக்கட்டாயமாக குண்டம்மா முகாமில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சில நாட்கள் அங்கேயே தங்குமாறு மகளைக் கட்டாயப்படுத்தியுள்ளார். நண்பரின் வீட்டில் தங்கியிருந்த சிறுமியை தந்தையின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்த போது, அவர் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக, "என் நண்பருக்குத் தான் உன்னைத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன். இது பற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் உன் அம்மாவைக் கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டி உள்ளார்.

தந்தையின் நண்பர் அதன் பின்னரும் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து, யாரும் இல்லாத நேரத்தில் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது, தாயார் வந்து அவரை காப்பாற்றியுள்ளார். தாயார் விசாரித்த போது நடந்த அனைத்தையும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமி தனது தாயின் உதவியுடன் கங்காவதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தொழிலாளி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!