துப்பாக்கியை சுத்தம் செய்த போது விபரீதம்.. முன்னாள் ராணுவ வீரர் மீது தோட்டா பாய்ந்ததில் பரிதாப பலி..!!

 

துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தவறுதலாக குண்டு வெளியேறியதால் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுரை மாவட்டம், பெத்தானியாபுரம் தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ராணுவத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 20 நாட்களாக தனியார் வங்கியில் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காவல் நிலையத்தில் ஒப்படைக்க இன்று காலை தனது வீட்டின் மொட்டை மாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியை தொட்டதில் துப்பாக்கியிலிருந்து தோட்டா திடீரென வெளியேறியது. வெளியே வந்த தோட்டா ராஜேந்திரனின் வயிற்றில் புகுந்தது.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கரிமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதையடுத்து, கரிமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!