டிச.1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... நாகையில் கொண்டாட்டம்!

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் கத்தூரி விழாவினை முன்னிட்டு வரும் டிசம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் நாகை மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும். 

நாகூர் கந்தூரி திருவிழா நாகை மாவட்டத்தின் மிகப் பெரிய ஆன்மிக விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர்  30ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம், டிசம்பர் 1 அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் என முக்கிய நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு, டிசம்பர் 1ஆம் தேதி நாகை மாவட்டத்திற்குள் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 13ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!