காற்று மாசு உச்சம்… தில்லியில் நாளை முதல் அலுவலகங்களுக்கு 50% கட்டுப்பாடு!
தில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (டிசம்பர் 18) முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தில்லியின் காற்று தரக் குறியீடு மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த திங்கள்கிழமை காற்றின் தரக் குறியீடு 498 புள்ளிகளை எட்டியது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிஎஸ்-3 பெட்ரோல், பிஎஸ்-4 டீசல் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை அமல்படுத்தப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அலுவலகங்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் தேவையெனில் அதிகாரிகள், ஊழியர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணி நேரத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அலுவலகப் பயணங்களால் ஏற்படும் வாகனப் போக்குவரத்தை குறைக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!