undefined

இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு!

 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காகச் சிறப்பாக விளையாடிய டெல்லியைச் சேர்ந்த இளம் வீராங்கனை பிரதிகா ராவலுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 1.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கையில் கடந்த மாதம் நிறைவடைந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் பிரதிகா ராவல் மொத்தம் 308 ரன்களைக் குவித்தார். அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தைப் பிடித்து அசத்தினார். வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது காயமடைந்த காரணத்தால், அவர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

பிரதிகா ராவலின் அபாரமான ஆட்டத்தைப் பாராட்டி முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப் பதிவில், "இன்று, முதல்வரின் 'ஜன் சேவா சதனில்' இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் திறமையான இளம் வீராங்கனை பிரதிகா ராவலை வரவேற்றோம். எங்கள் மகள் பிரதிகா, டெல்லிக்குப் பெருமை சேர்த்துள்ளார். விளையாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரிக்கும் வகையில், டெல்லி அரசு அவருக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்க உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!