சபரிமலையில் இன்று முதல் அறுசுவை அன்னதானம்… ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், தினமும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை மதிய நேரங்களில் வடமாநில உணவான புலாவ் அன்னதானமாக வழங்கப்பட்டு வந்தது.
பெரும்பாலான பக்தர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், புலாவ் உணவிற்கு பெரிய வரவேற்பு இல்லை என்ற புகார் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் கேரளாவின் பாரம்பரிய உணவான சத்யா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்பார், பொரியல், அப்பளம், பாயாசம் உள்ளிட்ட அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டது.
இன்று முதல் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்க தொடங்கப்பட்டது. இதனை செயல் அலுவலர் பிஜூ துவக்கி வைத்தார். புதிய அன்னதான ஏற்பாட்டுக்கு ஐயப்ப பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!