மொபைல் ஆப் மூலம் பிரபல ரவுடிக்கு ஆப்பு!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில், போரூர் எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி தனியார் மருத்துவமனை முன், சந்தேகத்திற்கிடமாக திரிந்துள்ளார்.

அதாவது, தனியார் மருத்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைப்பது போல் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், எஃப்.ஆர்.எஸ் என்ற ஃபேஸ் ரெகக்னிஷன் சாஃப்ட்வேர் மூலம் இவரை பரிசோதனை செய்திருக்கின்றனர். 

அப்போது இவர் மயிலாடுதுறையில் பல முக்கிய வழக்குகளில் தேடப்பட்டு வரும் கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. இவருக்கு கர்லிங் கார்த்திக் என்ற பட்ட பெயரும் உள்ளது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்துள்ளது.

மேலும் அந்த நபரின் மீது பிடிவாரண்ட் இருப்பதையும் போலீசார் அறிந்தனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களிடம் பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?