undefined

'ஜனநாயகன்' போஸ்டரை மருத மரத்தினடியில் வைத்து மனமுருகி பிரார்த்தனை... பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த்!

 

விஜய்யின் அரசியல் வருகைக்கு அச்சாரம் போடும் வகையில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், திட்டமிட்டபடி இன்று (ஜனவரி 9) வெளியாகவில்லை. இதற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததே காரணம். இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோவில் வளாகத்தில் உள்ள புனித மருத மரத்தில் 'ஜனநாயகன்' திரைப்படப் போஸ்டரை வைத்து, தடைகள் நீங்க வேண்டி தேங்காய் உடைத்துப் பிரார்த்தனை செய்தார். மஞ்சள் நிற உடையில் வந்திருந்த அவர், படம் விரைவில் வெளியாக வேண்டும் என்பதோடு விஜய் தமிழக முதல்வராக வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கங்கம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து, ஆடு வெட்டி அன்னதானம் வழங்கித் தவெகவினர் கொண்டாடினர். படத்தின் வெளியீடு தள்ளிப்போனது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் மற்றும் காட்சிகள் தற்போதைய அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகத் தணிக்கை வாரியம் கருதுகிறது. குறிப்பாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிகளை நீக்க (Cut) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் ஆன்மா பாதிக்கப்படும் என்பதால், அந்தக் காட்சிகளை நீக்கத் தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்தத் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி முடிவாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!