சென்னையில் கடும் பனிமூட்டம்... எக்ஸ்பிரஸ் ரயில்கள், விமானங்கள் தாமதம்!
கடந்த சில நாட்களாகவே சென்னையில் நிலவி வரும் பனிமூட்டம், இன்று அதிகாலை உச்சக்கட்டத்தை எட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்ததால், பாதுகாப்பு கருதி மின்சார ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன:
குறிப்பாகத் திருத்தணி, அரக்கோணம் மற்றும் திருவள்ளூரிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்களும் காலதாமதத்தைச் சந்தித்தன. இதனால் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பனிமூட்டம் காரணமாகப் பார்வைத்திறன் 500 மீட்டருக்கும் குறைவாகச் சென்றதால்: பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை வர வேண்டிய சுமார் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சில விமானங்கள் திருச்சிக்குத் திருப்பி விடப்பட்டன.
சென்னையிலிருந்து அந்தமான், மதுரை மற்றும் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகப் புறப்பட்டன. காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதே இந்தப் பனிமூட்டத்திற்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே போன்ற பனிமூட்டம் அதிகாலை நேரங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கிளாம்பாக்கம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் பனிமூட்டம் மிக அடர்த்தியாக இருந்ததால், வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!