undefined

எக்ஸ்பிரஸ் ரயிலில்   3 பெட்டிகள் தடம் புரண்டு பரபரப்பு… பயணிகள் அலறல்…!

 
 

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரி நோக்கி நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இன்று காலை ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது. ரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன. இதில் ஒரு ஏசி பெட்டியும், இரண்டு பொதுப் பெட்டிகளும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதும் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்பு சம்பவங்களும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் பத்ரக் பகுதியில் இருந்து மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பயணிகள் பயணம் தொடர மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!