undefined

மகாராஷ்டிரா  விமான விபத்தில் பலியான  பயணிகள் விவரம் வெளியீடு!   

 

 

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் அஜித் பவாருடன் பயணித்தவர்கள்: தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, தலைமை விமானி சாஹில் மதன், துணை விமானி ஷம்பவி பதக் ஆகியோர்.

விமான விபத்து சம்பவம் காலை 8:44 மணிக்கு நிகழ்ந்தது. மும்பை-பாராமதி பயணத்திற்காக VSR Ventures-ஐ சேர்ந்த Learjet 45 (VT-SSK) விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. விமானிகள் முதல்முறையாக தரையிறங்க முயன்ற போது ஓடுதளம் சரியாக தெரியவில்லை எனத் தெரிவித்ததால் தரையிறங்காமல் மேலெழும்பினர். இரண்டாவது முயற்சியில் ஓடுதளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிமிடத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இந்த விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

AAIB (Aviation Accident Investigation Bureau) தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணை முடிவுகள் வெளியாகும் போது விபத்துக்கான காரணங்கள் தெளிவாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு மற்றும் மத்திய அரசு உயிரிழந்த 5 பயணிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. இது மாநில அரசியலும் விமானப் போக்குவரத்து துறையும் பெரும் அதிர்ச்சியில் இருக்கச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!