undefined

 அசத்தல்... காது அழுக்கால் புற்றுநோய்க்கு எண்ட் கார்டு...  விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

 
 

காதில் சேரும் அழுக்கை வெறும் கழிவாக அல்லாமல், அதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ‘செருமெனோகிராம்’ எனப்படும் இந்த முறையை கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நெல்சன் அந்தோனியோசி தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. காது அழுக்கில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து உடலில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்தப் பரிசோதனை போல ஊசி குத்தும் வலி இல்லாத இந்த ஆய்வு குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும் என்பதால் கவனம் பெற்றுள்ளது. 751 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 5 பேருக்கு புற்றுநோய் இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து இந்த ஆய்வு விஞ்ஞான உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்காக 2025ஆம் ஆண்டின் சிறந்த மருத்துவ விருதும் இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களையும் கண்டறிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், காது அழுக்கை அகற்ற இயர்பட்ஸ் அல்லது குச்சிகளை பயன்படுத்துவது செவிப்பறைக்கு பாதிப்பு ஏற்படுத்து காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!