பழனியில் தைப்பூசத்திற்கு குவிந்த பக்தர்கள்... கட்டண தரிசனம் முழுவதும் ரத்து!
பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருவதால், கட்டண தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தரிசனக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தைப்பூச நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வசூலிக்கப்படும் விரைவு தரிசன கட்டணமும் இந்த நாட்களில் கிடையாது.
மூன்று நாட்களும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற உள்ளன. பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!