undefined

பக்தர்கள் அதிர்ச்சி... திருப்பதியில் உணவில் மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை.!
 

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.அதன்படி  மலையில் தனியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மார்ச் 5ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனியாக வந்திருந்த  பெண் ஒருவரிடம் கோயிலில் இருந்த பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் பேச்சுக்கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் உணவில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். 


இதனால் தனியாக வந்த பெண் மயங்கிய நிலையில் அப்பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணத்தை இந்த இரண்டு பேரும் திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது.   பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்ததில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவருடைய சித்தி சாரதா  என  தெரியவந்தது. 

இதனையடுத்து அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் சேர்ந்து பல்வேறு  கோவில்களுக்கு சென்று அங்கு தனியாக வந்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் மெதுவாக பேச்சு கொடுத்து பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்தை  கலந்து கொடுத்து அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள், பணம், செல்போன்கள் இவைகளை  கொள்ளையடித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.  ஏற்கனவே தமிழ்நாட்டில் பல இடங்களில் இது போன்ற செயல்களில் விஜயகுமார் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.   விசாரணைக்கு பிறகு  கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து சுமார் 21 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், 45000 ரொக்க பணம், 3 மொபைல் போன்கள், மயக்க மாத்திரைகள் 6, ஒரு கார் இவைகளை  பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?