விடுமுறை தினத்தில் திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்... 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் சிறப்பாக நடத்தப்பட்டன.
விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கடலிலும் நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். கோவிலின் உள்ளே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!