பிரபல நடிகையுடன் தனுஷ் ரகசிய திருமணம்!
பிப்ரவரி 14ம் தேதி தனுஷுக்கும், மிருணாள் தாகூருக்கும் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் இடையே விவாதம் வெடித்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் நம்ப மறுக்க, மிருணாள் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே தனுஷ், மிருணாள் தாகூர் காதலிப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இருவரும் இதுகுறித்து எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. இன்ஸ்டாகிராமில் ஒருவரின் பதிவை ஒருவர் லைக் செய்வது, மிருணாள் தமிழ் பாடல்கள் பாடி வீடியோ வெளியிடுவது போன்ற விஷயங்களை வைத்து ரசிகர்கள் காதல் என உறுதி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று திருமணம் என தகவல் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் பேசப்படுகிறது. இது உண்மையா, வதந்தியா என்பது தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தரப்பு தரப்பாக பிரிந்து வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனுஷ் விளக்கம் அளிப்பாரா என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!