undefined

தனுஷ் வீட்டில் அடுத்த விவாகரத்து... செல்வராகவன் மனைவி விவாகரத்து கோருகிறாரா? - ரசிகர்களிடையே பரபரப்பு!

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான செல்வராகவனின் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தன் கணவர் செல்வராகவனுடன் எடுத்தப் புகைப்படங்களை நீக்கியிருப்பது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தால், இயக்குநர் செல்வராகவன் விவாகரத்து கோருகிறாரா என்ற வதந்திகள் தற்போது எழுந்துள்ளன.

'7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்றச் சிறந்த திரைப்படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து 'மெண்டல் மனதில்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர்.

அதைத் தொடர்ந்து, தன் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். கீதாஞ்சலி 'மாலை நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கீதாஞ்சலி சமீபத்தில் தன் கணவர் செல்வராகவனுடன் எடுத்தப் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், "அடுத்த 6 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது" என்று கூறியிருந்தார். அவர் பேசிய இந்த வாக்கியத்தையும், தற்போது புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளச் செயலையும் ரசிகர்கள் தொடர்புபடுத்தி, செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினர் விவாகரத்து செய்யப் போகிறார்களா என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். இருப்பினும், செல்வராகவன் தன் சமூக வலைத்தளப் பக்கங்களில் மனைவியுடனானப் புகைப்படங்கள் எதையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!