தனுஷின் அடுத்த படத்தில் சர்ச்சை ... ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு ஈராஸ் நிறுவனம் வழக்கு!
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், இயக்குநர் ஆனந்த் எல். ராய் மற்றும் அவரது கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
2013-ல் வெளியான 'ராஞ்சனா' படத்தின் கதை, அதில் உள்ள தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் வர்த்தக முத்திரையை அதன் தயாரிப்பு நிறுவனமான ஈராஸிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனந்த் எல். ராய் தற்போது இயக்கி வரும் 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தில், 'ராஞ்சனா' படத்தின் சாயல் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஈராஸ் நிறுவனம் கூறுகிறது.
'தேரே இஷ்க் மே' படத்தின் விளம்பரங்களிலும், புரோமோக்களிலும் அனுமதியின்றி 'ராஞ்சனா' என்ற பெயரைப் பயன்படுத்தியதும் ஈராஸ் நிறுவனத்தைக் கோபப்படுத்தியுள்ளது.
தங்களது அறிவுசார் சொத்துரிமையை மீறியதற்காகவும், வர்த்தக ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் சுமார் ரூ.84 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஈராஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!