விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்... ! 

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (25) என்பவரைப் போலீசார் நேற்று (மார்ச் 19) அதிரடியாகக் கைது செய்தனர். ஒன்பது நாட்களாகத் தமிழகத்தையே உலுக்கிய இந்தப் போராட்டத்திற்குப் பிறகு சிக்கிய இந்தக் குற்றவாளியைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படையினர் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

தூத்துக்குடி போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தர்ம முனீஸ்வரனை விசாரித்த நீதிபதி, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி அதிரடி உத்தரவிட்டார். இதன்படி, வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார். அன்று மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் குற்றவாளிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதால் அங்குச் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட தர்ம முனீஸ்வரனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் வேடநத்தம் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். "அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன் குற்றவாளியைச் சிறையில் அடைத்துள்ளோம்; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவனுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கித் தருவோம்" எனத் தூத்துக்குடி போலீசார் உறுதி அளித்துள்ளனர். 9 நாள் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளி சிறைக்குச் சென்றிருப்பது அந்தப் பகுதியில் ஒரு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!