’தல’ தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
’தல’ தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறப்பட்டதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரியிருந்தார் தோனி. இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலம் கடந்த ஆண்டு வழக்குரைஞர் ஆணையர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற விசாரணையில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி விவாதத்தின் பதிவை எழுத்து வடிவில் மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என தோனி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!