'தல' ரசிகர்களுக்குத் தாளாத சோகம்...ராசி எண்ணான 7ஐ துறந்து 8ம் எண்ணிற்கு மாறிய தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது அடையாளமாகத் திகழ்ந்த '7' ஆம் எண் ஜெர்சியைக் கைவிட்டு, இனி '8' ஆம் எண் ஜெர்சியைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது விளையாட்டு உலகில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கால்பந்து உலகில் ரொனால்டோவிற்கு எப்படி ஏழாம் எண்ணோ, அதேபோல் கிரிக்கெட்டில் தோனி என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது ஏழாம் எண் ஜெர்சிதான். தனது பிறந்த தேதியைக் குறிக்கும் வகையில் இத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ராசி எண்ணைத் தற்போது திடீரென மாற்றியுள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தோனியின் இந்தத் திடீர் மாற்றத்தால், இணையத்தில் உலகப் புகழ்பெற்ற 'தல ஃபார் எ ரீசன்' (Thala For a Reason) என்ற வாசகத்தைப் பதிவிட்டு வந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். "சில எண்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும், ஆனால் இன்று நான் எட்டாம் எண்ணிற்கு மாறுகிறேன்" என்று தோனி பதிவிட்டுள்ளதோடு, இதற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தோனியின் ஏழாம் எண் ஜெர்சியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தும் விதமாக ஓய்வு பெறச் செய்திருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து அந்த எண்ணையே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் இந்த முடிவிற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இது ஏதேனும் புதிய வணிக விளம்பரத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், தனது அணியின் முக்கிய வீரரான ஜடேஜாவின் எண்ணைத் தோனி தேர்வு செய்திருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உணர்ச்சிகரமான காரணம் இருக்குமோ என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். எது எப்படியாயினும், ஏழாம் எண் என்பது வெறும் எண் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என்று பதிவிட்டு வரும் ரசிகர்கள், தோனியின் அதிகாரப்பூர்வ விளக்கத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!