நாகார்ஜுனா வீட்டிலும் டிஜிட்டல் கைது... மனம் திறந்த நடிகர்!
ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிரஞ்சீவி, எஸ். எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ் பாபு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நாகார்ஜுனாவும் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசும் போது, தனது குடும்பத்தில் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக அவர் அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்தார்.
இந்த டிஜிட்டல் மோசடியில் சிக்கிய அவர்கள், காவல்துறையை அணுகியதன் மூலம் பிரச்சினை தீர்ந்தது என்று நாகார்ஜுனா தெரிவித்தார். டிஜிட்டல் குற்றங்களை தடுப்பதில் காவல்துறையின் முனைப்பை அவர் பாராட்டி, ஏதேனும் சந்தேக நிலை உருவானால் உடனே போலீசாரை நாட வேண்டும் என பொதுமக்களுக்கும் அறிவுறுத்தினார்.
நாகார்ஜுனா கூறிய இந்த தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் கைதுக்கு ஆளான அந்த குடும்ப உறுப்பினர் யார் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் தீவிரமாகப் பரவி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!