டிஜிட்டல் மார்டன் கணக்கெடுப்பு... நாளை முதல் அதிரடி ஆரம்பம்!
இந்தியாவில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் பிரம்மாண்டமாகத் தொடங்குகின்றன. வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கட்டங்களாக இந்த மாபெரும் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 31 லட்சம் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு, செப்டம்பர் 30ம் தேதி வரை முதற்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற உள்ளன.
இந்த முறை வரலாற்றிலேயே முதன்முறையாக, பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வாயிலாகவே சுயமாகப் பதிவு செய்யும் நவீன வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் உட்பட 16 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில் விவரங்களைப் பதிவு செய்பவர்களுக்கு, பிரத்யேகமான 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். இது கணக்கெடுப்பு முறையை எளிதாக்குவதுடன், துல்லியமான தரவுகளைப் பெறவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டத்தைத் தொடர்ந்து நடைபெற உள்ள இரண்டாம் கட்டப் பணியில், சாதி மற்றும் மதம் குறித்த முக்கியத் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு, நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் சரியான விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!