undefined

  தினேஷ் கார்த்திக் வீட்டுப் பின்புறம் மர்ம சடலம் மீட்பு!  

 
 

சென்னை அக்கரை கடற்கரைப் பகுதியில் உள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. முகத்திலும் வாயிலும் செலோடேப் சுற்றப்பட்டிருந்த நிலையில் சடலம் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பரிசோதனைக்குப் பிறகே இளைஞரின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அருகே இருந்த பையைச் சோதனையிட்ட போலீசார், மரணமடைந்தவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் (33) என்பதையும் கண்டறிந்துள்ளனர். சம்பவத்தைச் சுற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!