undefined

  சென்னையிலிருந்து பம்பை வரை நேரடி சிறப்பு பேருந்துகள் ...  முன்பதிவு தொடக்கம்!  

 

கார்த்திகை முதல் நாள் அன்று அய்யப்ப பக்தர்களின் விரத சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னையிலிருந்து சபரிமலை பம்பை வரை அரசு போக்குவரத்து கழகம் நேரடி சிறப்பு பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கத் தயாராகி வரும் நிலையில், இந்த நேரடி சேவை பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் நிலையங்களில் இருந்து தினமும் 5 பேருந்துகள் புறப்பட்டு வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து மதியம் 2 மணி, 2.30 மணி, 3 மணி ஆகிய நேரங்களில் பேருந்துகள் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை பம்பையில் சென்றடைகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து 2.30, 3 மணிக்கான பேருந்துகள் புறப்பட்டு தொடர்ந்து அடுத்த நாள் அதிகாலை பம்பை செல்லுகின்றன. இந்த பேருந்துகள் திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், குமுளி வழியாக இயங்குகின்றன.

இருக்கை கட்டணம் 1,215 முதல் 1,265 ரூபாய் வரையும், ஸ்லீப்பர் கட்டணம் 1,565 முதல் 1,630 ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவுக்கு tnstc.in இணையதளம் மற்றும் TNSTC மொபைல் ஆப் வசதி தரப்படுள்ளது. நேரடி பம்பை சேவை கிடைப்பதால் சென்னையிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள அய்யப்ப பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!