ரூ.87-ல் இருந்து ரூ.109 ஆக எகிறிய டீசல்... ஐ.ஓ.சி.எல் (IOCL) அதிரடி முடிவால் தொழிற்சாலைகள் அதிர்ச்சி!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதன் நேரடி விளைவு, இன்று (மார்ச் 20, 2026) இந்தியத் தொழில் துறையைப் பதம் பார்த்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனம் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.22 ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தத் திடீர் உயர்வால், இதுவரை ரூ.87.67-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், தற்போது ரூ.109.59 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 25 சதவீதத்திற்கும் மேலாக விலை அதிகரித்திருப்பது, மின் உற்பத்திக்கு டீசலை நம்பியிருக்கும் பெரிய தொழிற்சாலைகள், ரயில்வே மற்றும் வணிக வளாகங்களுக்குப் பெரும் இடியாக இறங்கியுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர 'பவர் பெட்ரோல்' விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஈரான் - இஸ்ரேல் மோதலால் உலகப் பொருளாதாரம் மந்தமாகியுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கை இந்தியத் தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "இந்த விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்" எனத் தென்னிந்தியத் தொழில் மற்றும் வர்த்தக சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் போர் பதற்றம் தணியாவிட்டால், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் இதுபோன்ற 'அதிர்ச்சி வைத்தியம்' இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!