undefined

கணவருடன் தகராறு... ஆத்திரத்தில் மகளை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற தாய்!

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மல்காஜ் கிரி பகுதியில், குடும்பத் தகராறில் பெற்ற மகளையே தாய் மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமது சுலைமான் (எ) டேவிட் மற்றும் மோனாலிசா தம்பதியினர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஷெரோன் மேரி என்ற மகளும் இருந்தனர். மோனாலிசா கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் அடிக்கடி பிள்ளைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த கடந்த திங்கட்கிழமை அன்று, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வழக்கம் போலக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருந்த மோனாலிசா, தனது மகள் ஷெரோன் மேரி செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர், "எதற்காக என் போனை எடுத்தாய்? உன்னைக் கொன்று விட்டு நானும் செத்து விடுகிறேன், அப்போது தான் எல்லாப் பிரச்சனையும் தீரும்" என்று கத்தியபடியே, பிஞ்சுக் குழந்தையைப் பிடித்து மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில் மாடிப் படிக்கட்டுகளில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியைப் பார்த்த தந்தை டேவிட், பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். ஆனால், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். பெற்ற மகளையே ஆத்திரத்தில் கொன்ற தாய் மோனாலிசாவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவருடன் ஏற்பட்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்ளப் பெற்ற மகளையே பலிகொடுத்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!