பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் பிப்.6 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இந்த மனுக்களை பிப்ரவரி 14 ம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம், நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தேர்தல் அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிட விரும்பும்வர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்றும், பிப்.6 அன்று நண்பகல் 12 மணி முதல் மனுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் பெறலாம் எனவும், தேவையான விவரங்களை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!