undefined

 டிட்வா புயலால்  பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு, 700 பேர் மாயம்! 

 
 

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக பெய்த தொடர்ச்சியான கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் பலியானோர் எண்ணிக்கை 212 இருந்து 334 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பல பகுதிகள் சேறு, இடிபாடுகள், விழுந்த மரங்களால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த பெரு மழை காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 700 பேரும் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதுடன், அவசர நிலை நிலவுகின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் சர்வதேச உதவி அணிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலை குறித்து அதிபர் அனுர குமார திசநாயக, “இது நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சவால். இந்நிலையிலிருந்து இலங்கை விரைவில் உயர்வோம்” என உறுதி தெரிவித்துள்ளார். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் குறைந்த பின் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!