தேமுதிக மாநாட்டில் திடீரென மயங்கி விழுந்த நிர்வாகி உயிரிழப்பு!
அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (55) கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கிராமத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டு திடலில் இருந்தபோது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக செல்வராஜை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநாட்டில் இருந்த தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!