திமுக கிளைச் செயலாளர் சுட்டுக் கொலை... நிலத்தகராறில் பயங்கரம்!
சேலம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் (46), வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மனைவி சரிதாவுடன் மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் பதுங்கியிருந்தவர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஜேந்திரனுக்கும் உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறால் முன்விரோதம் நீண்டநாட்களாக இருந்து வந்தது. இதில் பல இடங்களில் குண்டு பாய்ந்து ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்பேரில் கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். நிலத் தகராறை அடுத்து திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் கல்வராயன் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!