undefined

பிப்ரவரி 1  முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை  !

 

“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் திமுக பரப்புரை தொடங்கப்பட உள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பரப்புரை நடைபெறவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதற்காக 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள் களமிறங்க உள்ளனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்படும். அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த தொகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சாதனைகள் விளக்கப்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட உள்ளன. பரப்புரை வெற்றியடைய தேவையான விளம்பரங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!