திமுகவினர் புலி வாலை பிடித்துவிட்டனர் - தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்!
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை மேலாண்மைப் பிரச்சினைகளைக் கண்டித்தும், அங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை நேரில் ஆய்வு செய்தும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் இன்று அதிரடி கருத்துகளைத் தெரிவித்தார். திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் முறையற்று குப்பைகள் கொட்டப்படுவதை பார்வையிட்ட அவர், "இந்த விவகாரத்தில் தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துவிட்டனர்" என விமர்சித்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செயல்படுத்தப்படாமல், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவில் உப்புத் தன்மையாக மாறியுள்ளதாக அருண்ராஜ் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், "ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற திருப்பூர் நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு திருப்பூரைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் மீது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுமக்களுக்குச் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைகளைத் த.வெ.க. வேடிக்கை பார்க்காது" என்றார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது. உரிய ஆய்வு இன்றிப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் பட்டியலில் இணைக்கத் தமிழக வெற்றி கழகம் முழு முயற்சியில் ஈடுபடும்" என்று உறுதியளித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த அருண்ராஜ், "தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க விரைவில் ஒரு தனிக்குழு அமைக்கப்படும். இது குறித்துத் தலைவர் விஜய் மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்" எனத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க மற்றும் சில கட்சிகள் ஆதாயம் தேட முயன்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேவையற்ற இடங்களில் பிரச்சினைகளை உருவாக்குபவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர் என்றார். திருப்பூரில் குப்பை பிரச்சினைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாகத் தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும் என்றும் அவர் இந்தச் சந்திப்பின் போது உறுதிபடத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!