undefined

  திமுகவின் சாயம் வெளுக்கிறது... த.வெ.க நேரடி தாக்குதல்!

 

தமிழகத்தில்  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முதல்வர்  ஆட்சியில் இருந்தும் மத நல்லிணக்க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இது குறித்து  தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.


வாய்வித்தையில் மட்டும் தமிழ்நாடு உரிமைகள். மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் இந்த தி.மு.க. அரசால், பா.ஜ.க. மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரத்தான் செய்கிறது. தி.மு.க.வும் பா.ஐ.கவும் ‘எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்’ என்பது, இதுபோன்ற செயல்களால் உறுதியாகவும் செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்று. தமிழக மக்களும் உணர்ந்தே வருகின்றனர். எல்லாவற்றிற்கும் சேர்த்து, 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு மூலம் கிடைக்கத்தான் போகிறது” என பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?