வீடு புகுந்து திமுக பிரமுகரின் மகனுக்கு கத்திகுத்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் முகமதியார் தெருவில் பன்னீர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திமுக நகர செயலாளரான இவருடைய மகன் தயாளன் (28) வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது உறவினரும், மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தின் உதவியாளருமான சரவணன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில், தயாளன் தனது நண்பர் சங்கரலிங்கத்துடன் வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் கண்ணன் (31) ஆகியோர் சொத்து பிரச்சினை தொடர்பாக தயாளனிடம் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இது தொடர்பாக தயாளன் தரப்பில் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திமுக பிரமுகரை வீடு புகுந்து கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!