நாளை முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்!
Updated: Mar 8, 2025, 11:56 IST
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!