"ஆட்டு மந்தையில் புகுந்த ஓநாய் போல திமுக ஆட்சி!" - முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாப் பாதுகாப்பிற்காக வந்த பெண் காவலர்களை, கழிவறையில் ரகசியமாக வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை முன்வைத்து தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது 'எக்ஸ்' தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
"முதலமைச்சரின் பாதுகாப்புப் பணிக்கு வந்த சீருடையணிந்த பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் அரங்கேறியுள்ளது. இது சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் வகையில் திமுக அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சியை "கேவலப்பட்ட ஆட்சி" என்றும் விமர்சித்துள்ளார்."ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" எனத் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டுமானால், வரும் தேர்தலில் திமுக அரசை விரட்டியடிப்பது ஒன்றே வழி என அவர் தனது பதிவில் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!