முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்... 2026 மட்டுமில்ல எப்போதும் திமுக ஆட்சி தான்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகைக்குச் சென்றுள்ளார். நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இன்று 2 வது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி செய்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” 5 நாட்கள் பயணத்தில் மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. மக்கள் எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.நீலகிரி மாவட்டத்தில் மட்டுமில்லை இங்கு சுற்றுலா பயணிகளாக வந்திருக்கும் மக்களும் எழுச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். 2026 தேர்தல் எப்படி இருக்கும்? என கேட்டார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” 2026 தேர்தலில் மட்டும் திமுக வெற்றி இல்லை அதற்கு பிறகு வரும் 2031 மற்றும் அதற்கு பிறகு 2036 என எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.
அடுத்ததாக ஆளுநர் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்” எனவும் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!