“திமுக தீய சக்தி”... விஜய் பேச்சு சர்ச்சை; அமைச்சா் பெரியசாமி பதிலடி!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சி விழாவில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். “திமுக தீய சக்தி” என்று கூறிய அவர், திமுக ஆட்சியில் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். திருவள்ளுவர் இருந்திருந்தால் இதைப் பற்றி எப்படி குறள் எழுதியிருப்பார் எனக் கேட்டு, “அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக முதற்றே உலகு” என பேசியது கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த தேர்தல்களுக்கு பிறகு தமிழகத்தின் நிலைமை குறித்து மக்கள் வருத்தமடைந்துள்ளதாக விஜய் கூறினார். மக்களின் துயரத்தை மாற்றுவதற்காகவே தனது கட்சி தொடங்கப்பட்டதாகவும், திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, விஜய்யை விமர்சித்து, “விஜய் தேர்தலில் வந்து நிற்கட்டும்; பின்னர் பார்ப்போம்” என்றார். விஜய் அரசியல்வாதி அல்ல என்றும், அவர் அரசியலை முயற்சி செய்து பார்க்கிறார் என்றும் கூறினார். அவரது அரசியல் அணுகுமுறையை கிண்டல் செய்யும் வகையில் அமைச்சரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!