"ஒரே மேடையில் விஜய்யும் - ராகுலும் நின்றால் திமுகவுக்கு மாரடைப்பு ஏற்படும்" - நாஞ்சில் சம்பத் அதிரடி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கூட்டணி அமைத்தால் அது திமுக-விற்குப் பெரும் பின்னடைவாக அமையும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
"விஜய்யும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் நின்றால், திமுக-வுக்கு மாரடைப்பே வந்துவிடும். அந்த அளவுக்கு இந்த இரண்டு இளம் தலைவர்களின் கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தகுந்த மரியாதை அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்தால் தமிழக அரசியல் களம் மாறும் என அவர் கணித்துள்ளார்.
"தனித்து நின்று வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக-வின் மீதான அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய சக்திகள் உருவாகி வருவதாகவும், அதில் தவெக-வின் பங்கு முக்கியமானது என்றும் அவர் தனது பேட்டியில் கோடிட்டு காட்டினார்.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேச்சு, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!