2026ல் மீண்டும் திமுக… வீரமணி உறுதி!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரம் மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பேசி முடிவு செய்வார்கள் என்றார். இதில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பங்கு பெறுவார்கள் என்றும் கூறினார்.
அதிகாரப் பங்கீடு குறித்து வெளியாகும் செய்திகள் ஊடகங்களுக்கு மட்டும் தீனியாக இருப்பதாக அவர் விமர்சித்தார். அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றும், திமுக கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் அவரும் ராகுல் காந்தியும் முடிவு செய்வது இயல்பானது என்றார். இப்போது அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை எனவும் வலியுறுத்தினார்.
திமுக–காங்கிரஸ் கூட்டணி வழக்கம் போல வலுவாகவே இருக்கும் என்றும் கி.வீரமணி நம்பிக்கை தெரிவித்தார். வதந்திகள் வந்தாலும் கூட்டணி மேலும் இறுகும் என்றார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என திட்டவட்டமாக கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!