திமுக கூட்டணி சீட் பட்டியல் லீக்… யார், யாருக்கு எத்தனை தொகுதிகள்?
2021 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றன. அப்போது 177 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் இந்த முறையும் தொடருகின்றன. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. பாமக ராமதாஸ் அணி, தேமுதிக ஆகியவற்றையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சு இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், திமுக கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. கடந்த முறை கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அதே அளவிலான தொகுதிகளே வழங்கப்படும் என்றும், புதிதாக இணையும் கட்சிகளுக்கே புதிய தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெளியான தகவலின்படி திமுகவுக்கு 164 தொகுதிகள், காங்கிரஸுக்கு 25, விசிக 6, மதிமுக 6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 6 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட், பாமக ராமதாஸ் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். கொமதேக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!