திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு.. இன்றிரவு 7 மணிக்கு ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பு!
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று மாலை சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு 7 மணி அளவில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை கூடுதல் இடங்களைப் பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, மொத்தம் 41 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் திருப்திப்படுத்த வேண்டிய சூழலில் உள்ள திமுக, காங்கிரஸிற்கு 30 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வரலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சந்திப்பின் போது கே.சி.வேணுகோபால் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் பங்கேற்க உள்ளனர். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் குறித்தும் முதற்கட்டமாக விவாதிக்கப்படலாம்.
சமீபத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு மத்தியில், திமுக-காங்கிரஸ் இடையேயான இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான முடிவு எட்டப்படுகிறதா அல்லது இழுபறி நீடிக்குமா என்பது இன்றைய சந்திப்பிற்குப் பிறகு தெரியவரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!