“திமுக ஐடி விங் Defence மட்டுமே செய்யக்கூடாது Attack-ம் செய்யணும்”.. ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரின் சிறப்பு மாநாட்டில் ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஐடி விங் அணியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
"நமது ஐடி விங் அணியினர் இதுவரை அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் 'Defence' பாணியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால், இனிமேல் அப்படி இருக்கக்கூடாது. எதிரிகளின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க அவ்வப்போது 'Attack' மோடுக்கும் மாறிக் கொள்ள வேண்டும்" எனத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
இந்த மாநாட்டில் 'ஒரே தலைவன்' என்ற பெயரில் திமுகவின் புதிய தகவல் தொழில்நுட்ப செயலியை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களை வென்று 'Sweep' செய்தோம். அதேபோல், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 'Clean Sweep' செய்து திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க வேண்டும்" என இலக்கு நிர்ணயித்தார். தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையைப் பலப்படுத்திய ஐடி விங் உறுப்பினர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஐடி விங்கிற்குப் பெரும் பங்கு இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போலி இணையப் பக்கங்கள் மூலம் பொய் செய்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர், அத்தகைய தவறான தகவல்களை நொடிப்பொழுதில் முறியடிக்க ஐடி விங் நிர்வாகிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!