தண்டவாள ஓரத்தில் பட்டம் விடக் கூடாது... ரயில்வே பாதுகாப்பு படை!
தண்டவாளம் ஓரத்தில் நின்று மாஞ்சா நூல் பட்டம் விடக்கூடாது என்று பள்ளி சிறுவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு பாதுகாப்பின் அவசியம் விளக்கப்பட்டது.
தண்டவாள ஓரத்தில் பட்டம் விடும்போது, அது உயரழுத்த மின்கம்பியில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தீவிபத்து ஏற்படலாம். ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்கள் உயிருக்கும் ஆபத்தானது என ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பட்டம் விடுவதற்கு பாதுகாப்பான இடங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!