பயங்கரம்... நைட் ஷிஃப்ட்ல வேலை பாக்குறீங்களா? முதல்ல இதைப் படிங்க!

 

நைட் ஷிப்ட்ல வேலைப் பார்க்கறீங்களா? உடனே இதை கொஞ்சம் நேரம்  ஒதுக்கி முழுசா படிச்சுப் பாருங்க. இரவில் இடைவிடாது பணி புரிபவர்களுக்கு எளிதில் ஹார்ட் அட்டாக் மற்றும் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நைட் ஷிஃப்ட்டுகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு உடற்பருமன், சர்க்கரை நோய் எளிதில் தாக்குகிறது. இதனால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கும், கேன்சரும் எளிதில் உண்டாகும் அபாயம் இருக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்துள்ளனர்.

இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளரும் உள்ளார். வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  மொத்த உடலின் பகல் இரவு சுழற்சியை மூளையிலுள்ள கடிகாரம் தான் இயக்குகிறது.

ஆனால் கல்லீரல், குடல் மற்றும் கணையத்தில் தனி கடிகாரங்கள் உள்ளன. அவற்றின் எண்ணங்களைப் பொறுத்தே உறுப்புகள் செயல் படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'இரவு நேரங்களில் வேலை செய்பவர்களின் உயிரியல் அமைப்பு மாறிப் போகிறது. அதனால் இது இரவு என சில சிக்னல்கள் சொல்ல, இல்லை இது பகல் என வேறு சில சிக்னல்கள் சொல்கிறது. இதனால் மொத்த உடலும் குழம்பிப் போய், அவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களும் பாதிக்கின்றன' என இதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். 14 ஆரோக்கியமான தன்னார்வளர்களின் ரத்தத்தைப் பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!