மருத்துவர் இல்லாதோர் சருமப்பொலிவு சிகிச்சை செய்யத் தடை!
சென்னை அண்ணாநகர் பகுதியில் ‘மிஸ்டர் ஹேர்’ என்ற பெயரில் இயங்கி வந்த சிகை சீரமைப்பு சிகிச்சை மையத்தில் போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்துக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி மாநில மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட நெறிமுறைகளின்படி, முடி மாற்று மற்றும் லேசர் சார்ந்த தோல் சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரிய உரிமம் பெற்ற மருத்துவ நிறுவனங்களிலேயே இத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தகுதி இல்லாமல் சிகிச்சை வழங்குவது சட்ட விரோதம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு முன் மருத்துவரின் தகுதி மற்றும் மையத்தின் உரிமத்தை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!