undefined

 பிரபல மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து... பரபரப்பு!

 

தமிழகத்தின் தலைநகர் சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகந்நாதன் என்பவர் மருத்துவராக பணிபார்த்து வருகிறார்.

இந்நிலையில், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் பாலாஜியை வடமாநில இளைஞர் விக்னேஷ் உட்பட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!