மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்... அரசு மருத்துவமனைகள் முடங்கியதால் நோயாளிகள் கடும் அவதி!
இமாச்சல பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 22-ம் தேதி, சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (IGMC) சிகிச்சை பெற்று வந்த அர்ஜுன் சிங் என்ற நோயாளிக்கும், அங்கு பணியாற்றிய மருத்துவர் ராகவ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விபரீதச் சம்பவத்தை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு விசாரணை நடத்தி மருத்துவர் ராகவை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது. அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் சிம்லா, காங்க்ரா, மண்டி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிப் பிரிவு மற்றும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தூர தேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவர்கள் இன்றித் தவித்து வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்களுடன் இயங்கி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!