அப்பா என கூறிக் கொள்பவருக்கு 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி மகள் இல்லையா?... ஈபிஎஸ் கடும் கண்டனம்!
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ” கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் அரசு மாறி வருகிறது. "குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்" என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!